இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன்: பிறந்த நாளில் வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விஜய்சேதுபதியை இதற்காக வருத்தம் தெரிவித்து உள்ளார்.
விஜய்சேதுபதி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வணக்கம்,
எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். இவ்வாறு விஜய்சேதுபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
???? pic.twitter.com/dRRrYrmRd1
— VijaySethupathi (@VijaySethuOffl) January 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments