தர்மதுரை: விஜய்சேதுபதியின் மூன்று ஹீரோயின்கள் யார் யார்?

  • IndiaGlitz, [Thursday,December 17 2015]

நானும் ரெளடிதான்' வெற்றி படத்தை அடுத்து விஜய்சேதுபதி நடித்து வரும் படம் 'தர்மதுரை. தேசியவிருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமி இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். தமன்னாவை தவிர இந்த படத்தில் மேலும் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. தற்போது அவர்கள் யார் யார்? என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.


விஜய்சேதுபதியுடன் ஏற்கனவே 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் ரம்மி' ஆகிய படங்களிலும் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'காக்கா முட்டை' படத்திலும் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். வைரமுத்து இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் ஏற்கனவே எழுதி கொடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.