உங்களுக்கு இது கேம், எங்களுக்கு லைஃப்: விஜய் சேதுபதி மகன் படத்தின் டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!

  • IndiaGlitz, [Sunday,June 16 2024]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படம் ஒரு பக்கம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகம் ஆகும் ’பீனிக்ஸ்’ என்ற படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

சூர்யா ஹீரோவாக அறிமுகம் ஆகி உள்ள இந்த படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது. சிறையில் இருக்கும் ஒருவனை போட்டு தள்ள அரசியல் பிரபலம் ஒருவர் அடியாட்களை அனுப்ப அதே சிறையில் இருக்கும் சூர்யா அந்த நபரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என டீசரில் இருந்து தெரிய வருகிறது.

அதிரடி ஆக்சன் காட்சிகளில் துள்ளி விளையாடும் சூர்யாவுக்கு முதல் படமே வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ வைரலாகி வருகிறது.

 

More News

கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் இப்படிப்பட்டவரா? தனுஷ் - சிம்பு பட நடிகையின் அதிர்ச்சி தகவல்..!

கர்நாடக மாநிலத்தில் இளைஞர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகை பவித்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தர்ஷன் குறித்து

இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் மல்டிஸ்டார் படமா? இணையும் இரண்டு ஹீரோக்கள்..!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான முத்தையாவின் அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் மேலும் இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

'விடாமுயற்சி' படப்பிடிப்பை உறுதி செய்த அர்ஜுன்.. ரிலீஸ் தேதியும் இதுதான்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கு மேல் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த

ஏசி பேருந்துகளை டிசைன் செய்யும் பொறுப்பு.. பிரபல கலை இயக்குனரிடம் ஒப்படைத்த அரசு..!

தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் உருவான திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணிபுரிந்த பிரபலம் ஒருவருக்கு ஏசி பேருந்துகளை டிசைன் செய்யும் பொறுப்பை அரசு ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

50 கோடி வசூலை நெருங்கியபோதும் 'கருடன்' தயாரிப்பாளருக்கு ஒரு குறை: என்ன நடந்தது?

சூரி  நடித்த 'கருடன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.