பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் விஜய் சேதுபதி மகன்? மகனை எப்படி ட்ரீட் செய்வார் தந்தை?

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மற்ற சீசன்கள் போல் இல்லாமல், இந்த சீசனில் முதல் நாள் முதலே விறுவிறுப்பு ஆரம்பித்து விட்டது என்பதும், போட்டியாளர்களுக்கு சண்டை சச்சரவு என்பது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி, இந்த சீசனில் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளரை எலிமினேஷன் செய்வது, அதன் பின் மீண்டும் அந்த போட்டியாளரை ரீஎண்ட்ரி செய்வது என ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 9 பெண் போட்டியாளர்கள் என 18 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீர் ட்விஸ்டாக, விஜய் சேதுபதி மகன் சூர்யா, பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி மகன் சூர்யா, ஒரு போட்டியாளராக இல்லாமல், தான் அறிமுகமாகும் ’பீனிக்ஸ்' படத்தின் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி வரும் ’பீனிக்ஸ்' என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக, விஜய் சேதுபதி மகன் சூர்யா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி, தனது மகன் சூர்யாவை எப்படி ட்ரீட் செய்வார், இருவருக்கும் இடையிலான ஜாலியான உரையாடல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது என்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

More News

கொஞ்சம் லோக்கலா களமிறங்கிய பிரதீப் ரங்கநாதன்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் 'டிராகன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில

வரங்களை அள்ளித்தரும் வாராகி அம்மன்

வராகி அம்மன், தன் பக்தர்களின் துன்பங்களை நீக்கி, அவர்களுக்கு நன்மைகளை அளிக்கும் அன்புள்ள தெய்வமாக போற்றப்படுகிறாள்.

ZEE5-ல் மித்தாலஜி திரில்லர் 'ஐந்தாம் வேதம்' டீசர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..1

ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர்

ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் தேதி மாற்றமா? புதிய தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஷங்கர் இயக்கத்தில் உருவான 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் கிறிஸ்துமஸ்

ரஜினி படத்திற்கு லாஜிக் பார்க்க முடியாது.. ரஜினி ஹெலிகாப்டரில் வரும் காட்சி குறித்து ஞானவேல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் பெரும்பாலும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள்