செம்ம ஸ்மார்ட்டான கெட்டப்புக்கு மாறிய விஜய் சேதுபதி.. இந்த படத்திற்காகவா?

  • IndiaGlitz, [Tuesday,July 25 2023]

நடிகர் விஜய் சேதுபதி ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது கெட்டப்பை மாற்றி மிரட்டி வருகிறார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளியான ’ஜவான்’ படத்தின் கெட்டப்[ மிரள வைத்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவரது பிளாஷ்பேக் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் போராட்டக்காரர் கெட்டப்பிலிருந்த விஜய் சேதுபதி இரண்டாம் பாகத்தின் பிளாஷ்பேக் காட்சியில் ஸ்மார்ட்டாக மாறி உள்ளார். இந்த படத்திற்காக அவர் வேற லெவலில் கெட்டப் மாறி உள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளார் என்ற செய்தியை பார்த்தோம். முதல் பாகம் போலவே இரண்டாவது பாகமும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வருகிறது

More News

தனுஷின் அடுத்த படத்தில் இணையும் 4 பிரபலங்கள்.. வேற லெவலில் இருக்கும் போல..!

தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்.. 'ஜெயிலர்' படத்தின் முக்கிய அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம்  வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சாயிஷா 2 வயதாக இருந்தபோது வாங்கிய கிஃப்ட்.. மகளின் 2வது பிறந்தநாள் பரிசாக கொடுத்த ஆச்சரியம்..!

நடிகை சாயிஷா இரண்டு வயதாக இருந்தபோது அவரது அம்மா வாங்கிய பிறந்தநாள் கிப்ட் தற்போது சாயிஷாவின் மகளின் இரண்டாவது பிறந்தநாளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.  

கவுண்டமணி - யோகிபாபு இணைந்து நடிக்கும் படம்.. ஒரே படத்தில் ஒட்டுமொத்த நகைச்சுவை கூட்டம்..!

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் யோகி பாபு உட்பட தமிழ் சினிமாவின்

இவருக்கா மயோசிட்டிஸ் ..? வேற லெவலில் பேலன்ஸ் செய்யும் சமந்தா..!

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் சென்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான சிகிச்சை செய்வதற்கு சில மாதங்கள் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்றதாகவும் கூறப்பட்டது.