பிரபுதேவாவுக்காக விஜய் சேதுபதி பாடிய பாடல்... வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,August 16 2023]

பிரபுதேவா நடித்த ’வுல்ஃப்’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடல் தற்போது வெளியாகி பாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’வுல்ஃப்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் அம்பரீஷ் கம்போஸ் செய்துள்ள ’சிங்கிளு மாட்டு கும்பல்’ என்ற இந்த பாடலை விஜய் சேதுபதி, ரேவந்த் மற்றும் விஷ்ணுபிரியா பாடியுள்ளனர். விஜய் சேதுபதி பாடிய இந்த பாடலை ரசிகர்கள் ரசித்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

பிரபுதேவாவின் 60-வது திரைப்படம் ’வுல்ஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்சன் காட்சிகள், திகில் மற்றும் சஸ்பென்ஸ் கதை அம்சம் கொண்ட இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்டா சிம்ஹா, ரமேஷ் திலக், அஞ்சு குரியன், ஸ்ரீ கோபிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில் கிஷோர் படத்தொகுப்பு பணியில் உருவாகி உள்ளது. இந்த படத்தை வினோ வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

More News

இமயமலையில் இருந்தாலும் 'ஜெயிலர்' வசூலை அக்கறையாக விசாரிக்கும் ரஜினி.. சென்னை திரும்புவது எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியான நிலையில் அதற்கு முந்தைய நாள் அவர் இமயமலை சென்றார் என்பதும் இமயமலையில் இருந்து அவர் எடுத்துக் கொண்ட

'குஷி' புரமோஷன் விழா.. செம்ம கெமிஸ்ட்ரியில் விஜய் தேவரகொண்டா - சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த 'குஷி' திரைப்படம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று சுதந்திர தினத்தில் நடந்தது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த செய்தி வாசிப்பாளரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பாத்திமா பாபு, அனிதா சம்பத், லாஸ்லியா உள்ளிட்ட செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்ட நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் 7வது சீசனிலும் ஒரு செய்தி வாசிப்பாளர்

அட்லி உதவியாளர் இயக்கத்தில் துல்கர் சல்மான்.. நாயகி இந்த பிரபலமா?

அட்லியின் உதவியாளர் கார்த்திகேயன் வேலப்பன் என்பவர் இயக்க இருக்கும் திரைப்படத்தில் துல்கர் சாமான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

'கைதி' படத்தில் நடிக்க இருந்த நேரத்தில் உண்மையிலேயே 'கைதி' ஆனேன்: 'லியோ' நடிகர்..

 கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கைதி' என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது