பிரபுதேவாவுக்காக விஜய் சேதுபதி பாடிய பாடல்... வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,August 16 2023]

பிரபுதேவா நடித்த ’வுல்ஃப்’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடல் தற்போது வெளியாகி பாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’வுல்ஃப்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் அம்பரீஷ் கம்போஸ் செய்துள்ள ’சிங்கிளு மாட்டு கும்பல்’ என்ற இந்த பாடலை விஜய் சேதுபதி, ரேவந்த் மற்றும் விஷ்ணுபிரியா பாடியுள்ளனர். விஜய் சேதுபதி பாடிய இந்த பாடலை ரசிகர்கள் ரசித்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

பிரபுதேவாவின் 60-வது திரைப்படம் ’வுல்ஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்சன் காட்சிகள், திகில் மற்றும் சஸ்பென்ஸ் கதை அம்சம் கொண்ட இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்டா சிம்ஹா, ரமேஷ் திலக், அஞ்சு குரியன், ஸ்ரீ கோபிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில் கிஷோர் படத்தொகுப்பு பணியில் உருவாகி உள்ளது. இந்த படத்தை வினோ வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.