விஜய் சேதுபதி பாடிய காதல் பாட்டு.. அதுவும் 'மாஸ்டர்' நடிகருக்காக.. சூப்பர் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிகராக மட்டுமின்றி சில படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணிபுரிந்துள்ளார் என்பதும் ஒரு சில படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ’ஹலோ நான் பேய் பேசுகிறேன்’ ’அட்டி’ ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ’தேவராட்டம்’ உள்ளிட்ட சில படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கேரக்டரில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் தற்போது ’கரா’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை அவதார் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் அச்சு ராஜாமணி இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்காக ஒரு பாடலை விஜய் சேதுபதி பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சுமார் மூஞ்சி குமாரு’ காதல் குமாராக மாறி ஒரு பாடலை பாடியுள்ளார் என்று படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விரைவில் இந்த பாடல் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments