'96' திரைப்படம்: த்ரிஷாவிடம் விஜய்சேதுபதி வைத்த வித்தியாசமான கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகவுள்ள திரைப்படம் '96'. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி கடந்த திங்கட்கிழமை திரையிடப்பட்டபோதே இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவிட்டதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் இந்த படத்தை கொண்டாடி விமர்சனம் எழுதியுள்ளன. குறிப்பாக விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோர்களின் நடிப்பு இந்த படத்தில் பேசப்படும் என கருதப்படுகிறது.
கடந்த 1996ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 22 வருடங்கள் கழித்து மீண்டும் சேர்ந்தால் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதை இயல்பான காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் நிச்சயம் பார்வையாளர்களின் மலரும் நினைவுகளை தட்டியெழுப்பும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிலையில் இன்று '96' திரைப்படம் வெளியாகவுள்ளதை அடுத்து தனது 10 ஆம் வகுப்பு குரூப் போட்டோவை சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். மேலும் இதே போன்று நீங்களும் உங்களுடைய 10ஆம் வகுப்பு புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகை த்ரிஷா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ரமேஷ் திலக், நடிகர் விக்ராந்த் ஆகியோருக்கு விஜய்சேதுபதி கோரிக்கையும் வைத்துள்ளார். எனவே விரைவில் த்ரிஷா உள்பட அனைவரின் பத்தாம் வகுப்பு புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
My 10th std group pic ????#96SchoolGroupPicChallenge ??
— VijaySethupathi (@VijaySethuOffl) October 2, 2018
Its ur turn ????????????@trishtrashers @RameshThilak53 @VigneshShivN @vikranth_offl #96TheMovie releasing Oct 4th pic.twitter.com/P4ZiEhlK24
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com