விஜய்சேதுபதியின் மாதமாக மாறுகிறது பிப்ரவரி

  • IndiaGlitz, [Tuesday,January 05 2016]

தனுஷ் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'நானும் ரவுடிதான்' படத்தின் வெற்றி நடிகர் விஜய்சேதுபதியை உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ள விஜய் சேதுபதி நடித்த மூன்று படங்கள் வரும் பிப்ரவரி மாதம் அதாவது அடுத்த மாதம் தொடர்ந்து வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


'சூதுகவ்வும்' இயக்குனர் நலன்குமாரசாமி இயக்கிய 'காதலும் கடந்து போகும்' என்ற திரைப்படம் பிப்ரவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிப்ரவரி மூன்றாம் மற்றும் நான்காவது வாரங்களில் விஜய்சேதுபதி நடித்த 'இடம் பொருள் ஏவல்' மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்கள் ரிலீஸ் செய்ய அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே வரும் பிப்ரவரி மாதம் விஜய்சேதுபதியின் மாதமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த படங்களை அடுத்து மெல்லிசை, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் இவ்வாண்டின் முதல் பாதியிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சுந்தர் சி படத்தில் முதன்முறையாக இணையும் பிரபல நடிகை

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூஜம் பாஜ்வா மற்றும் பலர் நடித்த 'அரண்மனை 2' என்ற பிரமாண்டமான திகில்

காமெடிக்கு மாறிய நயன்தாரா ஹீரோ

கடந்த ஆண்டு வெளிவந்த வெற்றி படங்களில் குறிப்பிடத்தக்க படம் 'மாயா' என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது...

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரனில் ஏ.ஆர்.முருகதாஸ்

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் ஆகிய வெற்றி படங்களில் நடித்த பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் திரைப்படம் 'பிச்சைக்காரன்....

மகாபாரத்திலேயே பீப் சவுண்ட் உள்ளது. பார்த்திபன்

சிம்புவின் பீப் பாடல் தமிழகம் முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் பார்த்திபனின் பீப் பாடல் ஒன்று வெளியாகியது...

ரஜினியின் 'கபாலி'யில் இணையும் சர்வதேச நடிகர்கள்

அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தில் வில்லன் வேடத்தில் ஹாலிவுட் நடிகர் ஜெட்லி நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை 'கபாலி' படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மறுத்ததை ஏற்கனவே பார்த்தோம்...