close
Choose your channels

ரஜினி பட பாணியில் வியாபாரம் ஆகிய விஜய்சேதுபதி படம்

Monday, October 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் வழக்கமாக பூஜை போட்ட அன்றோ அல்லது அதற்கும் முன்னரோ வியாபாரமாகி வருவது கோலிவுட் திரையுலகில் வழக்கமாகி வரும் ஒன்று. இந்த நிலையில் இதே பாணியில் இன்று படப்பிடிப்பு தொடங்கவுள்ள விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' படத்தின் வியாபாரம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' கடந்த வாரம் வெளிவந்து நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'ஜூங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் பாரீஸ் நகரில் தொடங்கவுள்ளது.

'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட புகழ் கோகுல் இயக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 'வனமகன்' புகழ் சாயிஷா நடிக்கவுள்ளார். சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்த படத்தை விஜய்சேதுபதியே தயாரிக்கின்றார் என்பதும், இந்த படம் அதிக பட்ஜெட்டில் உருவாகும் விஜய்சேதுபதியின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய்சேதுபதி-கோகுல் இணைந்த 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment