close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் நடிப்பது உண்மையா? விஜய்சேதுபதி விளக்கம்

Monday, November 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைக்காவின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன்2’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கமல்ஹாசன் தற்போது அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதால் அவரது காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து படமாக்கப்படும் என தெரிகிறது

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த செய்தியை படக்குழுவினர் உறுதி செய்யாத நிலையில் தற்போது விஜய்சேதுபதி இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ‘இந்தியன் 2’ படத்தில் நான் நடிப்பதாக வெளிவந்துகொண்டிருக்கும் செய்தியில் உண்மை இல்லை என்றும் நான் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்

ஏற்கனவே சமீபத்தில் நடைபெற்ற ’கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி கமலஹாசனுடன் நடிக்க இரண்டு முறை வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதனை தான் மிஸ் செய்து விட்டதாகவும், இனிமேல் கமலஹாசனுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் கட்டாயம் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தில் அவர் நடிக்காவிட்டாலும் எதிர்காலத்தில் நிச்சயம் கமல்ஹாசனுடன் ஒரு திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment