close
Choose your channels

இந்த வாரம் எலிமினேஷன் யார்? ஜாக்குலின் கணிப்புக்கு விஜய் சேதுபதி பதிலடி..!

Sunday, October 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் ஆகி உள்ள நிலையில் இந்த வாரமே எலிமினேஷன் உண்டு என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 24 மணி நேர எலிமினேஷன் ஒன்று நடந்து அதன்பின் அதே போட்டியாளர் மீண்டும் வந்துள்ள நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் குறித்த பிராசஸ் நடந்தாலும் இந்த வாரம் எலிமினேஷன் இருக்க வாய்ப்பு இல்லை என்று பலரும் கணித்துள்ளனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான மூன்றாவது புரமோ வீடியோவில் விஜய் சேதுபதி, ரவீந்திரன் ரஞ்சித் மற்றும் ஜாக்குலின் ஆகிய மூன்று பேரில் ஒருவர் வெளியே போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூற அதற்கு தர்ஷிகா’ யார் என்று தெரியவில்லை, ஒருவேளை ட்விஸ்ட்டாக கூட இருக்கலாம் என்று கூறினார்.

அப்போது ஜாக்குலின் யாரும் வெளியே போக மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று கூற, ரவீந்திரன் அல்லது ஜாக்குலின் வெளியே போவார்கள் என்று சில போட்டியாளர்கள் கூறுகிறார்கள்.

அப்போது விஜய் சேதுபதி ’கண்டிப்பாக இந்த வாரம் எலிமினேஷன் உண்டு, இதில் ஒரு பெயர் இருக்கிறது, மக்கள் தான் ஒரு போட்டியாளரை வெளியே அனுப்புகின்றனர். அவர் யார் என்பதை மக்களிடம் முதலில் காண்பிக்கிறேன் என்று கூறுவதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக இந்த வாரம் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment