ஷாருக்கானை பழிவாங்க பல வருடங்களாக காத்திருந்தேன்.. 'ஜவான்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷாருக்கானை பழி வாங்க வேண்டும் என்று பல வருடங்களாக காத்திருந்ததாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று நடந்த ‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.
இந்த விழாவில் அவர் மேலும் பேசியதாவது: ஷாருக்கானுடன் நடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம், அவரைப் போல் ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது என்று தெரிவித்தார். எல்லோரிடமும் அன்பாக பழகுவது, ஜாலியாக பேசுவதில் அவரை மிஞ்ச முடியாது என்று கூறினார்.
மேலும் பல வருடங்களாக ஷாருக்கானை பழிவாங்க காத்திருந்தேன் என்று கூறிய அவர் தான் பள்ளியில் படிக்கும் போது ஒரு சேட்டு பெண்ணை காதலித்ததாகவும், ஆனால் அந்த பெண்ணோ நான் ஷாருக்கான் ரசிகை, அவரை மட்டும் தான் லவ் பண்ணுவேன் என்று கூறியதால் அன்றிலிருந்து நான் ஷாருக்கானை பழி வாங்க வேண்டும் காத்திருந்ததாக விஜய் சேதுபதி தெரிவித்தார்.
‘ஜவான்’ படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளதால் ஷாருக்கானுடன் மோதும் காட்சிகள் உள்ளன என்றும் அப்போது அந்த சேட்டு பெண்ணை மனதில் நினைத்து தான் ஷாருக்கான் உடன் மோதினேன் என்றும் அவர் ஜாலியாக பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout