ஷாருக்கானை பழிவாங்க பல வருடங்களாக காத்திருந்தேன்.. 'ஜவான்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி..!

  • IndiaGlitz, [Thursday,August 31 2023]

ஷாருக்கானை பழி வாங்க வேண்டும் என்று பல வருடங்களாக காத்திருந்ததாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று நடந்த ‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

இந்த விழாவில் அவர் மேலும் பேசியதாவது: ஷாருக்கானுடன் நடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம், அவரைப் போல் ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது என்று தெரிவித்தார். எல்லோரிடமும் அன்பாக பழகுவது, ஜாலியாக பேசுவதில் அவரை மிஞ்ச முடியாது என்று கூறினார்.

மேலும் பல வருடங்களாக ஷாருக்கானை பழிவாங்க காத்திருந்தேன் என்று கூறிய அவர் தான் பள்ளியில் படிக்கும் போது ஒரு சேட்டு பெண்ணை காதலித்ததாகவும், ஆனால் அந்த பெண்ணோ நான் ஷாருக்கான் ரசிகை, அவரை மட்டும் தான் லவ் பண்ணுவேன் என்று கூறியதால் அன்றிலிருந்து நான் ஷாருக்கானை பழி வாங்க வேண்டும் காத்திருந்ததாக விஜய் சேதுபதி தெரிவித்தார்.

‘ஜவான்’ படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளதால் ஷாருக்கானுடன் மோதும் காட்சிகள் உள்ளன என்றும் அப்போது அந்த சேட்டு பெண்ணை மனதில் நினைத்து தான் ஷாருக்கான் உடன் மோதினேன் என்றும் அவர் ஜாலியாக பேசினார்.

More News

'ஜவான்' இசை வெளியீட்டு விழாவில் சர்ப்ரைஸ்.. கமல் சொன்னது என்ன தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இருந்தாலும் வீடியோ கால் மூலம்  ஜவான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மார்பு சைஸ் கேட்ட தரம் தாழ்ந்த ரசிகர்.. சரியான பதிலடி கொடுத்த ஷாலு ஷம்மு..!

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்முவிடம் சமூக வலைதளத்தில் உங்கள் மார்பு சைஸ் என்ன? என தரம் தாழ்ந்த கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்ட நிலையில் அவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.  

'கேப்டன் மில்லர்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த பிரியங்கா மோகன்.. வைரல் புகைப்படம்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷின் காட்சிகள் ஏற்கனவே படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது தனுஷ் அல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு

மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் சுகன்யா.. ஆனால் நடிகையாக அல்ல.. புதிய அவதாரம்..!

தமிழ் திரையுலகில் கடந்த  90 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த சுகன்யா நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆக இருப்பதாகவும் ஆனால் நடிகையாக இல்லாமல் பாடலாசிரியராக

'தளபதி 68' படத்தில் இருந்து வெளியேறினாரா ஜோதிகா? அவருக்கு பதில் இவரா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.