கமல் என்ன கொடுத்தார்? அனிருத்தை அடுத்து விஜய்சேதுபதி கூறிய பதில் இதுதான்!

உலகநாயகன் கமல்ஹாசன் ’விக்ரம்’ படத்தின் வெற்றிக்காக உங்களுக்கு என்ன கொடுத்தார் என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தில் வில்லன் வேடத்தில் விஜய்சேதுபதி மிரட்டியிருப்பார் என்பதும், அவருடைய நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’விக்ரம்’ பட வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ்க்கு கார், உதவி இயக்குனர்களுக்கு பைக், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஆகியவற்றை கமல் ஹாசன் கொடுத்தார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கமல்ஹாசன் உங்களுக்கு என்ன கொடுத்தார் என அனிருத்திடம் சமீபத்தில் கேட்ட போது ’விக்ரம்’ படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார் என்றும், அதுவே மிகப் பெரிய விஷயம்’ என்று கூறினார்.

அதேபோல் சமீபத்தில் விஜய் சேதுபதியிடம் இதே கேள்வி கேட்கப்பட்டபோது ’கமல் அவர்கள் தன்னுடன் நடிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்ததே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்றும், இது கனவிலும் நான் நினைத்துப் பார்க்காத ஒன்று’ என தெரிவித்தார்.