நான் செய்த புண்ணியமும், எனது சாபமும் இந்த ஒரு படம் தான்: விஜய்சேதுபதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் சேதுபதி தான் நடித்த படம் குறித்து கூறிய போது ’நான் செய்த புண்ணியமும் இந்த படம்தான், நான் பெற்ற சாபமும் இந்த படம்தான்’ என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவான ’லாபம்’ படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் வெளியாகும் முன்பே இயக்குநர் எஸ்பி ஜனநாதன் கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் அவர்கள் நினைவைப் போற்றும் வகையில் அவரது முழு உருவ சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த சிலை திறப்பு விழாவில் விஜய் சேதுபதி, கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசிய விஜய் சேதுபதி, ‘என் வாழ்வில் நான் செய்த புண்ணியம் என்றால் அது எஸ்பி ஜனநாதன் இயக்கிய கடைசி படமான ’லாபம்’ படத்தை தயாரித்ததுதான். ஆனால் எனக்கு கிடைத்த சாபம் என்னவென்றால் அதுவே அவருடைய கடைசி படமாக அமைந்தது தான்’ என்று தெரிவித்தார்.
மேலும் அவர் இந்த விழாவில் கூறியதாவது: `கம்யூனிஸத்தை செயல்களின் மூலமும், வாழ்க்கையின் மூலமும் வாழ்ந்து காட்டியவர் இயக்குநர் ஜனநாதன். கம்யூனிஸம், பெரியாரியத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் அதை பின்பற்றி வாழும்போதுதான் அதன் மீது பிடிப்பு ஏற்படும். படங்களில் வார்த்தைகளை பார்த்து பார்த்து விதைப்பார். ஆயிரம் வார்த்தைகளை 5 வார்த்தைகளில் அடக்குவார், நான் வசனங்களை வேகமாக பேசுவேன். அதனால் என்னிடம் `நடிக்கும்போது வார்த்தை தெளிவாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments