close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு சம்பளம் ரூ.55 கோடியா?

Wednesday, February 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக மட்டுமன்றி வில்லன் மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு இந்தி வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்த தொடரில் விஜய்சேதுபதியுடன் சாஹித் கபூர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இந்தத் தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதியின் சம்பளம் நாயகனாக நடிக்கும் ஷாகித் கபூரின் சம்பளத்தைவிட அதிகம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்தத் தொடரின் முதல் பாகத்தில் நடிக்கும் சாஹித் கபூருக்கு சம்பளம் ரூபாய் 40 கோடி என்றும் விஜய்சேதுபதிக்கு 55 கோடி என்றும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தமிழ் திரையுலகில் நாயகனாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு சம்பளம் ரூபாய் 10 முதல் 15 கோடி இருக்கும் நிலையில் பாலிவுட் திரையுலகின் வெப்தொடர்களில் நடிக்க அவருக்கு 50 கோடிக்கும் மேல் சம்பளம் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த தொடரில் ராஷிகண்ணா நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடரை ராஜ் மற்றும் டீகே இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் தயாரித்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment