close
Choose your channels

பிக்பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு எத்தனை கோடி சம்பளம்? ஆச்சரிய தகவல்..!

Friday, October 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. மற்ற சீசன்களை விட, இந்த சீசனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில், விஜய் சேதுபதியின் சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், அவருக்கு சுமார் 100 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்க முடியாது என கமல்ஹாசன் கூறிவிட்டதால், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 100 நாட்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற நிலையில், தொகுத்து வழங்குபவர்கள் 15 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் செட்டிற்கு வந்தால் போதுமானது.

சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் விஜய் சேதுபதி நிகழ்ச்சி ஒளிபரப்பானாலும், ஒரே நாளில் அவை படமாக்கப்படும் என்பதால் மொத்தம் 15 வாரங்களில் 15 நாட்கள் மட்டும் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த 15 நாட்களுக்கு அவர் சம்பளம் 15 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்று பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment