பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு? திரைப்படத்தை விட 3 மடங்கா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் கசிந்துள்ள நிலையில் அவர் திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு சம்பளம் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கடந்த ஏழு சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவருக்கு சம்பளமாக 100 முதல் 120 கோடி வரை கிடைத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தன்னால் தொகுத்து வழங்க முடியாது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான புரமோ வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி தற்போது ஒரு திரைப்படத்திற்கு 15 முதல் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.
Official : #VijaySethupathi is the new Host for #BiggBossTamil
— SmartBarani (@SmartBarani) September 4, 2024
Expecting in October end !!pic.twitter.com/w3EIuQFhmm
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments