'ஜவான்' படத்தில் மிரட்டும் வில்லன்: விஜய்சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்க மிகப் பெரிய தொகையை சம்பளமாக பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ உள்பட ஒருசில படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். மேலும் அவர் ஹீரோவாக நடித்த படங்களைவிட வில்லனாக நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி அதிக சம்பளம் வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, நயன்தாரா உள்ளிட்ட பலரது நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் என்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அவர் 21 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி அதிகபட்சமாக ஹீரோவாக நடிப்பதற்கே 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வரும் நிலையில் வில்லனாக நடிப்பதற்கு 21 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.