தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் குறித்து விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Saturday,January 27 2018]

சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காமல் தியானத்தில் இருந்த விஜயேந்திரர், தேசியகீதம் ஒலிக்கும்போது மட்டும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையாகி வருகிறது.

விஜயேந்திரரின் இந்த செயலுக்கு பாஜகவினர் தவிர அதிமுக உள்பட மற்ற அனைத்து கட்சியினர்களும் விஜயேந்திரருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தது குறித்து ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் திருவெறும்பூரில் நடைபெற்ற திருச்சி படைக்கலன் தொழிற்சாலை பொன்விழா ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய்சேதுபதி இந்த பிரச்சனை குறித்து கூறியபோது, 'தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை' என்று குறிப்பிட்டார்.

More News

சென்னையின் முக்கிய பதவிக்கு வருவாரா உதயநிதி?

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி கடந்த சில நாட்களாக அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தைவானில் ஷங்கர் பறக்கவிட்ட 'இந்தியன் 2'

இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகும் என்று நேற்று ஷங்கர் கூறியுள்ளார்

ரஜினியின் '2.0' டீசர் ரிலீஸ் எப்போது? ஷங்கர் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஷங்கரின் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டை பெற்ற பொங்கல் ரிலீஸ் படம்

நேற்று 'ஸ்கெட்ச்' திரைப்படம் ரஜினிக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. தயாரிப்பாளர் தாணுவுடன் இந்த படத்தை பார்த்த ரஜினி, படம் முடிந்தவுடன் படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

சாய்பல்லவியின் முதல் தமிழ்ப்படம் ரிலீஸ் தேதி

விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்த 'கரு' திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டபோதிலும் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.