இதுதான் உண்மையிலேயே கீழ்த்தரமான அரசியல்: விஜய்சேதுபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக படங்களில் நடித்து வெற்றி வாகை சூடி வரும் விஜய்சேதுபதிக்கு இந்த ஆண்டு குறைந்தது பத்து படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அவற்றில் ஒன்றுதான் சூப்பர் டீலக்ஸ்' இந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடிக்கின்றார்.
திருநங்கை கேரக்டரில் நடிப்பது சவாலாக இருந்ததாக கூறிய விஜய்சேதுபதி, திருநங்கைகளும் மனிதர்களும் தான் என்றும், அவர்களை பிரித்து வைத்து பார்ப்பதுதான் உண்மையிலேயே கீழ்த்தரமான அரசியல் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
முதல்ல, ஒரு ஆணா இருக்குறவங்க தன்னைப் பெண்ணா நினைச்சுக்கிறப்போ, அந்தத்தன்மை, அந்த நளினத்தைக் கொண்டு வந்துடலாம்னுதான் நினைச்சேன். ஆனா, நடிக்க ரொம்ப சேலன்ஜிங்கா இருந்துச்சு. திருநங்கை கேரக்டர்ல நடிக்கிறேன்னு சொன்னதுமே சில பேர் அருவருப்பான கமென்ட்ஸ் சொல்ல ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கெல்லாம் இன்னும் பக்குவம் வரலை, வாழ்க்கைன்னா என்னன்னு புரியலைன்னுதான் சொல்லணும். திருநங்கைகளும் சக மனுஷங்கதானே. பக்கத்து வீட்டுக்கு சாவு வந்தா, நம்ம வீட்டுக்கு வராதுங்கற குருட்டு நம்பிக்கை மாதிரியிருக்கு பலபேரின் நினைப்பு. எல்லோருக்கும் எல்லாமும் நடக்கும். நம்ம வீட்டிலும் திருநங்கை, திருநம்பின்னு யாரோ நாளைக்கு மாறலாம்.
மேல்சாதி, கீழ்சாதினு பாக்கிறமாதிரி, திருநங்கைளையும் பிரிச்சுப்பாக்குறாங்க. இப்படி சாதிரீதியா, செக்ஸுவல் ரீதியாப் பிரிக்கிறது எல்லாமே நம்ம தலைக்குள்ள திணிக்கப்பட்ட மிகப்பெரிய அரசியல். அதுதான் சக மனுஷங்களைத் தள்ளி வெச்சுப் பார்க்கவைக்குது. மக்கள் சேரவே கூடாதுங்கிறதுதான் அந்தக் கீழ்த்தரமான அரசியலோட நோக்கம். அதை ஜெயிக்க நட்பால மட்டும்தான் முடியும்.”
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments