கொடூரமாக கொலை செய்தால்கூட பத்தாது: சிறுமியை சீரழித்தவர்கள் குறித்து விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Wednesday,July 18 2018]

சென்னையில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 11 வயது சிறுமியை 22 பேர் கொடூரமாக பல மாதங்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடுமையை கண்டு தமிழகமே கொதித்து எழுந்துள்ளது. சிறுமியை சீரழித்த மனித மிருகங்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். கோலிவுட் திரையுலகினர்களும் இதுகுறித்து தங்களுடைய ஆத்திரங்களை கொட்டி தீர்த்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி, 'ஒரு பெண்ணுக்கு இந்த கொடூரம் நடந்தாலே தாங்க முடியாது. அந்த குழந்தை எப்படி தாங்கும். குற்றவாளிகளை கொடூரமாக கொலை செய்தால்கூட பத்தாது. உட்கார்ந்து பேசி கொண்டிருக்க நேரமில்லை. உடனே தண்டனை வேண்டும், அதுவும் வலுவாக இருக்க வேண்டும். அப்போதுதான் பயம் இருக்கும்.

பெண்கள் தான் இந்த பூமிக்கு சொந்தமானவர்கள். அவர்களால் தான் இந்த பூமியே அழகாக உள்ளது. பெண் குழந்தைகளும் பெண்களும் தெய்வத்திற்கு சமம். இந்த கொடூர குற்றம் செய்தவர்களை உட்கார வைத்து பேசிக்கொண்டிருப்பது சரியல்ல, தள்ளி போடாமல் உடனே தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.