'சிந்துபாத்' படத்தின் கதை இதிகாச புராணக்கதையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதி நடித்த 'சிந்துபாத்' திரைப்படத்தின் இசை வெளீயீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்சேதுபதி பேசியதாவது:
இயக்குனர் அருண்குமாருடன் வேலை செய்யும்போது மிகவும் நெருக்கமாக இருப்பது போல் உணர்கிறேன். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களுக்கு பின் வேறு நடிகர்கள் படங்களை இயக்குமாறு நானே அருணுக்கு பரிந்துரைத்தேன். ஆனால் அது நடக்காததால் மீண்டும் அவருடன் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிந்துபாத் படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதைதான். அந்த கதை எது என்பதை சொன்னால் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது என்பதால் அதை சொல்ல நான் விரும்பவில்லை. கடல் கடந்து வந்த ஒருவன் ஹீரோவின் மனைவியை தூக்கி கொண்டு போய்விடுவான். மனைவியை எப்படி ஹீரோ மீட்கிறான் என்பதுதான் இந்த கதை. இந்த கதையில் கணவன், மனைவி எமோஷனல் காட்சிகள் அழகாக இருக்கும். மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாதி முழுவதுமே கிட்டத்தட்ட கிளைமாக்ஸ்தான். அந்த அளவுக்கு படத்தில் சேஸிங் உள்ளது என்று கூறினார்.
இதிகாச புராணம் ஒன்றிலும் மனைவியை கடல் கடந்து தூக்கி கொண்டு செல்லும் கதையாக இருப்பதால் இந்த படத்தின் கதை அந்த புராணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
இந்த படத்தில் ஹீரோவுக்கு சரியாக காது கேட்காது என்பதால் நாயகி சத்தமாக பேச வேண்டிய கேரக்டர். இதனால்தான் அஞ்சலியை இயக்குனர் தேர்வு செய்தார். அஞ்சலி சாதாரணமாகவே கத்தி பேசுவார் என்பதால் அவரை தவிர இந்த கேரக்டருக்கு யாரும் பொருத்தமாக இருக்கமாட்டார்கள்
இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments