தமிழக கவர்னருக்கு நடிகர் விஜய்சேதுபதியின் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Friday,November 30 2018]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இந்த 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

இதன்படி சமீபத்தில் தமிழக அமைச்சரவை ஏழு பேர் விடுதலை குறித்த தீர்மானத்தை இயற்றி கவர்னர் அவர்களுக்கு அனுப்பியது. கவர்னர் இந்த தீர்மானத்தை பரீசிலித்து முடித்துவிட்டால் உடனடியாக 7 பேர் விடுதலை சாத்தியம் என்ற நிலையில் இன்னும் கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் 7 பேர் சிறை தண்டனை பெற்று இன்றுடன் 28 ஆண்டுகள் முடிவடைவதை அடுத்து தற்போது சமூக வலைத்தளத்தில் #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் நடிகர் விஜய்சேதுபதி தமிழக கவர்னருக்குக் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

'இது தமிழர்களுக்கான பிரச்சனை இல்லை. மனிதாபிமானத்தில், மனித உரிமையில் கேட்கப்படும் ஒரு விஷயம். தயவுசெய்து இந்த விஷயத்தில் கருணையுடன் முடிவெடுங்கள் கவர்னர் அவர்களே என்று விஜய்சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.