close
Choose your channels

பொணமே இன்னும் வீட்டுக்கு வரல்ல.. அதுக்குள்ள பணமா? விஜய் சேதுபதி வெளியிட்ட டிரைலர்..!

Sunday, September 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் ’ம்யிலாஞ்சி’ என்ற திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் இளம் பெண்கள் திடீர் திடீரென மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதும் அந்த கொலையை தட்டிக் கேட்கும் கிராமத்தினர்களை போலீசார் அடித்து நொறுக்குவதுமான காட்சிகள் இந்த டிரைலரில் உள்ளன.

மேலும் இறந்த இளம் பெண்களின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கும் அராஜக அதிகாரிகள், பொணமே இன்னும் வீட்டுக்கு வரல அதுக்குள்ள பணமா என்று பரிதாபமாக கேட்கும் பெற்றோர்களை மிரட்டும் அதிகாரிகள் போன்ற காட்சிகள் இந்த ட்ரெய்லரில் உள்ளன. மேலும் கையெழுத்து போடாவிட்டால் வீட்டில் லைட் எரியாது என்றும், இதுதான் அரசியல், இதுதான் அதிகாரம், இதுதான் பவர் என்றும் அதிகாரிகள் மிரட்டும் உச்சகட்ட காட்சியும் உள்ளது.

இந்த நிலையில் இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க இளைஞர் ஒருவர் முன்வருகிறார், அவர் என்ன செய்தார், அரசியல்வாதிகள், அதிகாரிகள் கொட்டத்தை எப்படி அடக்கினார் என்பதுதான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிகிறது.
விஷ்ணு பிரியன், ஸ்வேதா ரெட்டி, ரிஷி பிரகாஷ், அஜய், தீனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விகே நடராஜன் என்பவர் இயக்கி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment