பார்த்திபன் படத்தின் டைட்டிலை அறிவித்த விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Sunday,August 22 2021]

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டிலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சற்றுமுன் அறிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய்பிரியா, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படத்தை பிரபல இயக்குனர் எழில் இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் விஜய்சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ’யுத்த சத்தம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்த நிலையில் தற்போது ’துக்ளக் தர்பார்’ என்ற படத்தில் நடித்து உள்ளனர் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.