சேரனின் திருமணத்தை தொடங்கி வைத்த விஜய்சேதுபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சேரன் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி டிசம்பர் 12ஆம் தேதி சேரனின் பிறந்த நாளில் வெளியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்றுமுன் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் சேரனின் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்திற்கு 'திருமணம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் பாலாசரவணன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் @cherandreams sir ??
— VijaySethupathi (@VijaySethuOffl) December 12, 2018
இந்த நன்னாளில் உங்களின் #திருமணம் படத்தின் முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி ??#Thirumanam #HBDCheran@umapathyramaiah @Bala_actor @sidvipin @prenissofficial @onlynikil@CtcMediaboy pic.twitter.com/TlZVETgOmW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com