close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'றெக்க' ரிலீஸ் தேதி

Thursday, September 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. 'காக்கா முட்டை' மணிகண்டனின் 3வது படம், 'இறுதிச்சுற்று' ரித்திகாசிங்கின் 2வது படம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜய்சேதுபதியின் 'றெக்க' படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டது. ஆண்டவன் கட்டளை' ரிலீஸாகி 15 நாட்கள் இடைவெளியில் அதாவது அக்டோபர் 7ஆம் தேதி 'றெக்க' படம் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே இதே தேதியில் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' மற்றும் பிரபுதேவாவின் 'தேவி' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், கபீர்சிங், ஹரிஷ் உத்தமன், சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரத்தினசிவா இயக்கியுள்ளார். டி.இமான் இசையில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை காமன்மேன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment