தளபதி விஜய் மகன் படத்தை தயாரிக்கும் விஜய்சேதுபதி?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் மகன் சஞ்சய் நடிக்கவிருக்கும் முதல் படத்தை விஜய்சேதுபதி தயாரிக்கவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’ என்பதும் இந்த படம் கொரோனா பிரச்சனை முடிந்ததும் வெளிவரவுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்சேதுபதி தான் நடித்து கொண்டிருக்கும் ’உப்பெனா’என்ற தெலுங்கு படம் ஒன்றின் கதையை விஜய்யிடம் கூறியதாகவும், இந்த படத்தின் கதையை கேட்ட தளபதி விஜய், ‘இந்த கதை தனது மகன் சஞ்சய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து விஜய்சேதுபதி, ‘சஞ்சய் அந்த படத்தில் நடிப்பதாக இருந்தால் அந்த படத்தை தானே தயாரிப்பதாகவும் விஜய்யிடம் கூறியதாக கூறப்படுகிறது. விஜய் மகன் அறிமுகமாகும் படத்தை விஜய்சேதுபதி தயாரிப்பதாக இருந்தால் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் உருவாகி வரும் ‘உப்பெனா’ படத்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் வ்வைஷ்ணவ் தேஜ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ராயாணம் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout