விஷ்ணுவின் கதாநாயகன்' படத்தில் இணைந்த பிரபலம்

  • IndiaGlitz, [Sunday,November 13 2016]

சமீபத்தில் விஷ்ணு நடித்த 'வேலையில்லா பட்டதாரி' வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த நிலையில் விஷ்ணு தற்போது 'கதாநாயகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் முதல்முறையாக விஷ்ணுவுடன் ஜோடி சேருகிறார் கேதரின் தெரசா. முருகானந்தம் இயக்கும் இந்த படத்திற்கு சீன்ரோல்டான் இசையமைக்க விஷ்ணுவின் சொந்த நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் சூரி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் தற்போது இவ்வருடம் அதிக ஹிட் கொடுத்த பிரபல நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்சேதுபதிக்கு விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.