ஒரே நாளில் இரண்டு படங்களின் விழா! விஜய்சேதுபதி அசத்தல்

  • IndiaGlitz, [Saturday,August 03 2019]

கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக திரைப் படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. எனவே தான் இரண்டு மாதத்திற்கு ஒரு விஜய்சேதுபதி படம் வெளி வருவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது சுமார் 8 படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இன்று அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'துக்ளக் தர்பார்' என்ற படத்தின் பூஜையில் கலந்துகொண்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனத்தில் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான 'சங்கத் தமிழன்' என்ற படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இதற்கான பூஜையிலும் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். விஜய்சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பேத்ராஜ், சூரி, நாசர் நடித்துள்ள இந்த படத்தை விஜய்சந்தர் இயக்கியுள்ளார். விவேக் மெர்வின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒரே நாளில் ஒரு படத்தின் துவக்க விழாவிலும், டப்பிங் பட விழாவிலும் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மாரி செல்வராஜின் கவிதை: பிரபல அரசியல்வாதியை தாக்கி எழுதப்பட்டதா?

கோலிவுட் திரையுலகில் 'பரியேறும் பெருமாள்' என்ற ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ், ஒரு அரசியல் கட்சி தலைவரை மறைமுகமாக தாக்கி

சொந்த உழைப்பில் வாழ்பவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள்: பிரபல நடிகர் கருத்து

அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்கள் சேவை என்ற நிலை காமராஜர், கக்கன் காலத்துடன் முடிந்துவிட்டது. இன்றைய அரசியல் ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. தேர்தலின்போது முதலீடு செய்யும் அரசியல்வாதிகள்

சேரனைத் திட்டுவதா? சரவணனைக் கண்டிக்கும் பிரபல நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனை மரியாதைக்குரிய வார்த்தைகளால் சரவணன் பேசியது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அவரது இந்த செய்கையை திரையுலகில் உள்ள பலர் கண்டித்து வருகின்றனர்.

காலில் விழும் சரவணன், தடுக்கும் சேரன்: முடிவுக்கு வந்த மோதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சேரன் மற்றும் சரவணன் ஆகிய இருவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது தெரிந்ததே 

ரஜினியின் திரையுலக குரு காலமானார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை திரையுலகில் அறிமுகப்படுத்திய குரு கே.பாலசந்தர் என்றால் ரஜினிக்கு நடிப்பு பயிற்சி அளித்த குரு நடிகர் தேவதாஸ் கனகலா என்பது குறிப்பிடத்தக்கது.