பிரபல இயக்குனரின் படத்தில் இருந்து விலகிட்டாரா விஜய்சேதுபதி? என்ன காரணம்?
- IndiaGlitz, [Saturday,February 18 2023]
பிரபல இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக சமீபத்தில் புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியான நிலையில் தற்போது அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் திரை உலகின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி என்பதும் சமீபத்தில் அவர் நடித்த வெப் தொடரான ஃபார்ஸி’ நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சந்தானம் நடிப்பில் ’அரண்மனை 4’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இது குறித்த புகைப்படம் வெளியாகி இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது விஜய் சேதுபதி விலகி விட்டதாக கூறியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து விஜய் சேதுபதிக்கு பதில் வேற ஒரு பிரபல நடிகரை சுந்தர் சி தேடி வருவதாகவும் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ’அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நான்காவது பாகத்தில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தற்போது விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்படுவது கோலிவுட் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.