விஜய்சேதுபதி ஜோடியாக மணிரத்னம் பட நாயகி: டைட்டில் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழில் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வரும் நிலையில் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் டைட்டில் தற்போது ’19 (1)(a)’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள இயக்குனர் இந்து எனப்வர் இயக்கவிருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நித்யாமேனன் நடிக்கவுள்ளார். இவர் மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ உள்பட பல தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி, நித்யாமேனனுடன் இந்திரஜித் சுகுமரன், இந்திரன்ஸ் உள்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பதும் இந்த படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விஜய் சேதுபதியின் ‘96’ உள்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ள கோவிந்த் வசந்தா’ இந்த படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Here it is 19(1)(a) first look poster.#NithyaMenen #IndrajithSukumaran @AJFilmCompany
— VijaySethupathi (@VijaySethuOffl) November 3, 2020
Written & Directed by #IndhuVS pic.twitter.com/sbTZCxdF3y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments