விஜய்சேதுபதி ஜோடியாக மணிரத்னம் பட நாயகி: டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 03 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழில் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வரும் நிலையில் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் டைட்டில் தற்போது ’19 (1)(a)’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் இந்து எனப்வர் இயக்கவிருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நித்யாமேனன் நடிக்கவுள்ளார். இவர் மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ உள்பட பல தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, நித்யாமேனனுடன் இந்திரஜித் சுகுமரன், இந்திரன்ஸ் உள்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பதும் இந்த படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜய் சேதுபதியின் ‘96’ உள்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ள கோவிந்த் வசந்தா’ இந்த படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

பாஜகவில் அரசியல் அவதாரம் எடுக்கிறாரா சவுரவ் கங்குலி???

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து பிசிசிஐயின் தற்போதைய தலைவராக பதவி வகித்து வரும் சவுரவ் கங்குலி பாஜக சார்பாக முழுநேர அரசியல் பணியில் ஈடுபடப் போகிறார்

தலையில் ஹெல்மெட் இல்லை … இளைஞரிடம் 2 மீட்டர் நீளத்துக்கு சலானை நீட்டிய போலீசார்…

கர்நாடகாவில் காய்கறி கடை வைத்து நடத்தி வரும் தொழிலாளி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹெல்மட் அணியாமல் தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.

எஸ்.ஏ.சி தொடர்ந்த வழக்கு: விஜய் பட தயாரிப்பாளருக்கு சிறை!

இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த பண மோசடி வழக்கில் விஜய் படத் தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

திரையரங்குகளுக்கு என்னென்ன கட்டுப்பாடு: தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.

பாஜகவில் இணைந்தார் விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்!

அஜித் நடித்த 'விஸ்வாசம்' உள்பட ஒரு சில திரைப்படங்களின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோ என்பது தெரிந்ததே.