விஜய்சேதுபதி-விஜயா மூவீஸ் படத்தின் டைட்டில் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,May 07 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள 'மாமனிதன்' திரைப்படமும் 'சிந்துபாத்' திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது விஜயா மூவீஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்திற்கு 'சங்கத்தமிழன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவின் 'வாலு' மற்றும் விக்ரமின் 'ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கி வரும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்து வருகின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.