விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் ஆச்சரியமான தகவல்

  • IndiaGlitz, [Monday,October 22 2018]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதிதான் இன்றைய கோலிவுட் வெற்றி நாயகனின் ஒருவராக உள்ளார். அவர் நடித்த 'செக்க சிவந்த வானம்', 'இமைக்கா நொடிகள்', '96' ஆகிய மூன்று படங்களும் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் 'சூப்பர் டீலக்ஸ்' மற்றும் 'சீதக்காதி' ஆகிய படங்கள் இந்த ஆண்டுக்குள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பேட்ட' மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் 'நரசிம்மரெட்டி' ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளம் இசைஞானி யுவன்ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தின் வெற்றியை அடுத்து இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கவுள்ளார். இன்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் இசைஞானி இளையராஜா, யுவன்ஷங்கர்ராஜா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

More News

ஜிவி பிரகாஷூக்கு ஏ.ஆர்.முருகதாஸ் செய்யும் உதவி

ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். நடிப்பு, இசை என இரண்டையும் பேலன்ஸ் செய்து வரும் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஐங்கரன்

இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'ஜீவா' உள்ளிட்ட தரமான, வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசிந்திரன்.

'வடசென்னை' படத்தில் நீக்கப்படும் காட்சிகள்: வெற்றிமாறன் அறிவிப்பு

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியாகி சமூக வலைத்தள பயனாளிகள்

மீடூ விவகாரம்: இயக்குனர் சுசி கணேசன் நஷ்ட ஈடு கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக மீடூவில் பாலியல் குற்றச்சாட்டுக்களை நடிகைகள் உள்பட திரையுலகை சேர்ந்த பெண்கள் பிரபலங்கள் மீது சுமத்தி வருவதால் தமிழ் திரையுலகே பரபரப்பில் உள்ளது.

கூவத்தூராக மாறுகிறதா குற்றாலம்? தினகரனின் அதிரடியால் பரபரப்பு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தபோது இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது