விஜய்சேதுபதியின் அடுத்த படம் தயார்.. ரிலீஸ் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பாலிவுட் திரைப்படம் 'மெர்ரி கிறிஸ்மஸ்’ விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வந்த இன்னொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கிய ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு திரைப்படத்தில் நடத்தி வந்தார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற வந்த நிலையில் இன்றுடன் மலேசியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனை அடுத்து இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் ட்ரைலர் போன்ற புரமோஷன் பணிகளும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி ஜோடியாக ருக்மணி நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு முன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
That’s a wrap on #VJS51 🎥✨
— Yogi Babu (@iYogiBabu) November 30, 2023
An exhilarating Adventurous journey concluded at a breathtaking backdrop of Batu Caves Murugan Temple in Malaysia 🥳
Get ready for an action extravaganza✨
Title & First Look Soon
#VJS51
#MakkalSelvan @VijaySethuOffl @7CsPvtPte @Aaru_Dir… pic.twitter.com/tRwFrkdnMP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com