விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுவா? 

  • IndiaGlitz, [Wednesday,November 09 2022]

2022 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடித்த 'கடைசி விவசாயி’ ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ’விக்ரம்’ மற்றும் ’மாமனிதன்’ ஆகிய படங்கள் வெளியானது என்பதும் இந்த நான்கு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி ’விடுதலை’, ‘ஜவான்’, ‘மும்பைகார்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’VJS46’. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 2 என்றும், இதுகுறித்த முறையான அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

டி இமான் இசையில் உருவாகிய இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் இந்த பிக்பாஸ் ஷிவானி நாராயணன், குக் வித் கோமாளி புகழ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நான்கு வெற்றிப்படங்களை இந்த ஆண்டு கொடுத்த விஜய் சேதுபதி ஐந்தாவது வெற்றி படத்தையும் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.