விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.
ஹீரோ, வில்லன், சிறப்பு தோற்றம் என அனைத்து விதமான கேரக்டர்களிலும் அசத்தி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பது தெரிந்ததே. அதேபோல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் அவர் படங்களை நடித்து வருகிறார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ’விக்ரம்’ ’மாமனிதன்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது அவர் வெற்றிமாறனின் ’விடுதலை’ அட்லியின் ‘ஜவான்’ உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’மெர்ரி கிறிஸ்மஸ்’. பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி, காத்ரினா கைஃப் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் பாலிவுட் திரையுலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ’மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
Vijay Sethupathi - Katrina Kaif new film #MerryChristmas directed by Andhadhun fame Sriram Raghavan is set to release in theatres on December 23rd. pic.twitter.com/VNObDAZ1Qv
— LetsCinema (@letscinema) October 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com