நீண்ட காலமாக கிடப்பில் இருந்த விஜய்சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..
Send us your feedback to audioarticles@vaarta.com
நீண்டகாலமாக கிடப்பில் இருந்த விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் வெங்கட கிருஷ்ணன் லோக்நாத் என்பவரின் இயக்கத்தில் உருவான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படம் ரிலீஸ்-க்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆகியும் இந்த படம் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்படும் ரிலீஸ் ஆகாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற போதிலும் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் மே 19ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, கனிகா, ரித்விகா, மோகன்ராஜா, கரு பழனியப்பன், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படம் விஜய் சேதுபதியின் ரசிகர்களை முழு திருப்தி அடைய செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#YaadhumOoreYaavarumKelir TN release by @SakthiFilmFctry#YOYKfromMay19 @ChandaraaArts @EssakiduraiS @roghanth @akash_megha @sakthivelan_b @raguesaki @Riythvika @jayam_mohanraja @Vetri_DOP @nivaskprasanna @AbrahamEditor @saregamasouth @onlynikil @CtcMediaboy pic.twitter.com/lcmYNaHUmC
— VijaySethupathi (@VijaySethuOffl) May 4, 2023
#YaadhumOoreYaavarumKelir Audio will be out tomorrow ( May 5th) @ 6 PM@nivaskprasanna Musical#YOYKfromMay19 @ChandaraaArts @EssakiduraiS @roghanth @akash_megha @SakthiFilmFctry @sakthivelan_b @raguesaki @Riythvika @jayam_mohanraja @Vetri_DOP @AbrahamEditor @saregamasouth… pic.twitter.com/oFNftvv5Se
— VijaySethupathi (@VijaySethuOffl) May 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments