விஜய் சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் சேதுபதி நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று ’கடைசி விவசாயி’. இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்பட ஒருசில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.
இந்த நிலையில் ’கடைசி விவசாயி’ திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நல்லாண்டி என்பவர் விவசாயி வேடத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் மேலும் யோகிபாபு, முனீஸ்வரன், காளிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை மணிகண்டன் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் விவசாயிகளின் பிரச்சனைகளை பேசும் முக்கிய படம் என்றும் கூறப்படுகிறது.
#KadaisiVivasayi will hit the screens on Feb 11th.#KadaisiVivasayiFromFeb11 @dirmmanikandan @vsp_productions #TribalArtsProduction #ArtistsCoupe #RichardHarvey @Music_Santhosh @7CsPvtPte @iYogiBabu @proyuvraaj @Raichalrabecca @Aravindh_dir @r_kumarshivaji @cineinnovations pic.twitter.com/uHomxBbno0
— VijaySethupathi (@VijaySethuOffl) January 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com