இன்று நடந்த விஜய்சேதுபதியின் அடுத்த பட பூஜை

  • IndiaGlitz, [Friday,December 14 2018]

கோலிவுட் திரையுலகில் இன்று அதிக படங்களின் பூஜைகள் நடந்துள்ளது. அஜித்தின் 59வது படம், மகத்-ஐஸ்வர்யா தத்தாவின் படம், ஷாரிக் நடிக்கும் 'உக்ரம்' திரைப்படம் என ஒரே பூஜைமயமாக கோலிவுட் திரையுலகம் இருந்து வரும் நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் பூஜையும் இன்று நடைபெற்றுள்ளது.

விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கவுள்ள படம் குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய செய்தியை தயாரிப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தில் விஜய்சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் உள்ளனர்.

இளையராஜா இசையில் எம்.சுகுமார் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரவுள்ளது.