close
Choose your channels

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இயக்குனரா? இன்று மாலை அறிவிப்பு..!

Tuesday, July 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட்டிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பதும் சில படங்களில் வில்லனாகவும் சில படங்களில் நாயகனாகவும் நடித்து வரும் அவர் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிகிறது.

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே விதார்த், பாரதிராஜா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வசூல் அளவில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து அடுத்த திரைப்படத்தை இயக்குகிறார் என்றும் அதில் விஜய் சேதுபதி முக்கிய காலத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

விஜய் சேதுபதி தற்போது ’ஜவான்’ ’மெர்ரி கிறிஸ்மஸ்’ ஆகிய இரண்டு ஹிந்தி படங்களிலும் ’காந்தி டாக்ஸ்’ என்ற வசனம் இல்லாத சைலண்ட் படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமின்றி ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ இயக்குனர் ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment