விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் சேதுபதி நடித்த அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி புதிய போஸ்டருடன் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில் ’மெர்ரி கிறிஸ்மஸ்’ என்ற திரைப்படத்தில் கேத்ரினா கைப் உடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் ’மெர்ரி கிறிஸ்மஸ்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவுக்கு வந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் ’மெர்ரி கிறிஸ்மஸ்’ படத்தின் ரிலீஸ் செய்தியை விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராதிகா ஆப்தே உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
We decided to cut short the wait for the Christmas cheer!#MerryChristmas releasing in theatres near you ON 15th DECEMBER 2023.
— VijaySethupathi (@VijaySethuOffl) July 17, 2023
#SriramRaghavan @TipsFilmsInd #MatchboxPictures @RameshTaurani #SanjayRoutray #JayaTaurani #KewalGarg #KatrinaKaif #SanjayKapoor #VinayPathak… pic.twitter.com/oIct7d4DPj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments