எந்த கெட்டப் போட்டாலும் கச்சிதமா இருக்கே.. விஜய்சேதுபதி அடுத்த படத்தின் செம வீடியோ!

  • IndiaGlitz, [Monday,January 16 2023]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப் மற்றும் கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் வில்லன் வேடத்தில் நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று ’மைக்கேல்’. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வெளியாகி உள்ள இந்த வீடியோவில் ’மைக்கேல்’ படத்தின் கெட்டப்புடன் விஜய் சேதுபதி வருகிறார். வயதான தோற்றத்தில் ஆனால் அதே நேரத்தில் கம்பீரமாக அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சந்தீப் கிஷான் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான டீசர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.