விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 16 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கடந்த ஆண்டின் வெற்றி நாயகர்களில் ஒருவர் என்பது தெரிந்ததே. அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இமைக்கா நொடிகள்', 'செக்க சிவந்த வானம்', '96' மற்றும் சீதக்காதி' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. குறிப்பாக '96' திரைப்படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இந்த நிலையில் அவர் தற்போது 'மாமனிதன்', 'சூப்பர் டீலக்ஸ்', சயிரா நரசிம்மரெட்டி' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 'பண்ணையாரும் பத்மினியும்', மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மீண்டும் இணையவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தற்போது இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விஜய்சேதுபதியின் பிறந்த நாளான இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

விஜய்சேதுபதியுடன் அஞ்சலி நடிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

 

More News

விஷால் திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பு

நடிகர் விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

ஆரி-ஐஸ்வர்யா தத்தா படத்தின் டைட்டில் அறிவிப்பு

ஐஸ்வர்யா தத்தா, மகத்துடன் 'நல்லவன்னு பேர் எடுத்த கெட்டவன்டா' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் ஆரியுடன் ஒரு படத்திலும் நடித்து வருவதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

'இந்தியன் 2' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

கடந்த 1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இணைந்த 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து 22 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது

யுவன்ஷங்கர் ராஜாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

பிரபல இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜா சமீபகாலமாக படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் படமான 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திரை நட்சத்திரங்கள் யார் யார்?

தேசிய அரசியலிலும் சரி, மாநில அரசியலிலும் சரி நடிகர், நடிகைகளின் பங்கு நிச்சயம் அதிகளவில் இருக்கும் என்பதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.