close
Choose your channels

விஜய் சேதுபதி அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? குடும்ப செண்டிமெண்ட் நிச்சயம்..!

Friday, June 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ’மகாராஜா’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலாகி இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம் என்ன? என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

விஜய் சேதுபதி அடுத்த திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய ’நம்ம வீட்டு பிள்ளை’ ’கடைக்குட்டி சிங்கம்’ உட்பட சில படங்கள் குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் அவர் இணையும் படமும் குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’மகாராஜா’ என்ற மிகப்பெரிய வெற்றி படம் கொடுத்த விஜய் சேதுபதி ’கடைசி விவசாயி’ படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடிக்க இருப்பதாகவும் ’விண்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடர் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment