அரசியலில் குதிக்கும் விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Wednesday,February 06 2019]

கோலிவுட் திரையுலகில் தற்போது அதிகளவில் அரசியல் படங்கள் உருவாகி வருகிறது. விஜய்யின் 'சர்கார்', விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' போன்ற அரசியல் படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த ஆண்டு சூர்யாவின் 'என்.ஜி.கே', 'ஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' உள்பட ஒருசில அரசியல் படங்கள் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் அரசியல் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குனர் டெல்லிபிரசாத் தீனதயாள் இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளது என்றும் இந்த படத்திற்கு 'துக்ளக்' என்று டைட்டில் வவக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் ஒரு அரசியல் படம் என்றும், விஜய்சேதுபதி இந்த படத்தில் அரசியல்வாதியாக நடிக்கவிருப்பதாகவும் பேட்டி ஒன்றில் இயக்குனர் கூறியுள்ளார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதியின் அரசியல் கேரக்டர் மாஸாக இருகும் என்றும், அதே நேரத்தில் ரசிகர்கள் விரும்பும் வகையில் ஃபேண்டஸியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த படத்திற்கு பாலாஜி தரணிதரன் காரசாரமான வசனங்களை எழுதவுள்ளார்.

'96' உள்பட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையில் '96' விநியோகிஸ்தர் லலிதாகுமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் சென்னையில் தொடங்கவுள்ளதாக இயக்குனர் டெல்லி பிரசாத் தெரிவித்துள்ளார்.. இவர் 'சில்லுன்னு ஒரு காதல்' இயக்குனர் கிருஷ்ணா, பாலாஜி தரணீதரன், பிரேம்குமார் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

நல்லா சாப்பிடுங்க, அப்படியே 'தளபதி 63' அப்டேட் கொடுங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில்

என்னை நீ மறவாதிரு: இன்று வெளியாகும் நயன்தாரா படப்பாடல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு வெற்றி ஆண்டாக இருந்த நிலையில் இந்த ஆண்டின் ஆரம்பமே அவருக்கு விஸ்வாசம்' என்ற பிரமாண்ட வெற்றியை கொடுத்துள்ளது

'தளபதி 63' படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த தகவல்

தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பைரஸியை ஒழிப்பது என் கையில் இல்லை: விஷால் அதிரடி

தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி இணையதளங்களை ஒழிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் நான் கஷ்டப்பட்டாலும்

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித்துடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் தற்போது 'ஐரா', 'கொலையுதிர்க்காலாம்,